Images
  • india travel
    (படம்: AFP/Money SHARMA)

இந்தியாவுக்குச் செல்லும் பிரிட்டிஷ் பயணிகள், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தால் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை

இந்தியாவுக்குச் செல்லும் பிரிட்டிஷ் பயணிகள், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தால், இனி, கட்டாயமாகத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவையில்லை.

இதற்கு முன்பு, பிரிட்டனிலிருந்து அங்குச் செல்வோர் 10 நாளுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியது கட்டாயமாக இருந்தது.

நேற்று பிரிட்டன், தனது நாட்டுக்குள் வரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்தியப் பயணிகள், தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என அறிவித்தது.

அதை அடுத்து, இந்தியாவின் அறிவிப்பு வந்தள்ளது.

முன்னதாக, இந்தியாவில் தயாரிக்கப்படும் AstraZeneca தடுப்புமருந்து குறித்து இரு தரப்பினருக்கும் இடையே சர்ச்சை எழுந்தது.

பிரிட்டிஷ் மக்களுக்குப் போடப்பட்ட தடுப்புமருந்தைப் போலவே இருந்தாலும் பிரிட்டன், இந்தியாவின் Covishield என்ற தடுப்புமருந்தை அங்கீகரிக்க மறுத்துவந்தது.

அது குறித்துப் பலரும், பிரிட்டன் பாகுபாடு காட்டுவதாகக் குறைகூறினர். அதனைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் அதிகாரிகள் Covishield தடுப்புமருந்தை அங்கீகரித்தனர்.  

Top