Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வட இந்தியாவை வாட்டும் அனல் காற்று

கிருமிப்பரவலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவில், அனல் காற்றும் மக்களை வாட்டி வதைப்பதாகக் கூறப்படுகிறது.

வாசிப்புநேரம் -
வட இந்தியாவை வாட்டும் அனல் காற்று

(படம்: AFP / Jewel SAMAD)

கிருமிப்பரவலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவில், அனல் காற்றும் மக்களை வாட்டி வதைப்பதாகக் கூறப்படுகிறது.

வட இந்தியாவில், அனல் காற்றின் தாக்கம் அதிகம்.

தலைநகர் டில்லியில் வெயிலின் உக்கிரம் நேற்று 47.6 டிகிரி செல்சியஸை எட்டியது.

இந்த வார இறுதிவரை அனல் காற்று நீடிக்குமென அதிகாரிகள் முன்னுரைத்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள சுரு என்னுமிடத்தில், இந்தியாவிலேயே ஆக அதிகமாக 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.

அதனால், பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியே வரவேண்டாமென மாநில அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

உலக அளவில், நேற்று ஆக அதிகமான வெப்பம் நிலவியது அந்தப் பகுதியில்தான்.

இந்தியாவில், கடந்த சில பத்து ஆண்டுகளில் இவ்வளவு அதிகமான வெப்பம் பதிவானதில்லை.

உலகளாவிய வெப்பநிலையைப் பதிவு செய்துவரும் El Dorado இணையத்தளம் அதனைத் தெரிவித்தது.

அண்மையில் வீசிய அம்ப்பான் சூறாவளி, நாட்டின் சில பகுதிகளில் ஈரப்பதத்தை உறிஞ்சிச் சென்றதால், காற்று வறண்டு வெப்பம் அதிகரித்ததாக வானியல் வல்லுநர்கள் கூறினர்.

மேலும் வட இந்தியாவின் சில பகுதிகளில், வயல்களில் கூட்டம் கூட்டமாக வந்திறங்கும் வெட்டுக் கிளிகளால், பயிர்கள் நாசமடைவதாகவும் கூறப்படுகிறது.    

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்