Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியாவின் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸைத் தொட்டுவிட்டது

இந்தியாவில் கடுமையான அனல் காற்று வீசி வருகிறது. உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இந்தியாவின் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸைத் தொட்டு விட்டது.

வாசிப்புநேரம் -
இந்தியாவின் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸைத் தொட்டுவிட்டது

AFP/Money SHARMA

இந்தியாவில் கடுமையான அனல் காற்று வீசி வருகிறது. உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இந்தியாவின் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸைத் தொட்டு விட்டது.

கடந்த 18 ஆண்டு காணாத வகையில், புது டில்லியில் வெப்பநிலை முதன்முறை 47.6 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இன்னும் சில நாட்களுக்கு அனல் காற்றுச் சூழல் நீடிக்கக்கூடும். வழக்கமாக மே, ஜூன் மாதங்களில் இந்தியாவில் நாடு முழுவதும் வெப்பம் அதிகரிக்கும்.

என்றாலும், கடுமையான கோடை காரணமாக இதுவரை எவரும் மாண்டதாய்த் தகவல் இல்லை.
இதற்கிடையே, இந்தியாவில் கிருமித்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 150,000ஐத் தாண்டியுள்ளது. இந்நிலையில், வரும் நாட்களில் புது டில்லியில் வாழும் மக்கள் வெட்டுக் கிளிகளின் படையெடுப்பையும் சந்திக்கத் தயாராகி வருகின்றனர்.

இந்தியாவின் மத்திய, மேற்குப் பகுதிகளில் வெட்டுக் கிளிகள் ஐம்பதாயிரம் ஹெக்டர் பயிர்களை ஏற்கனவே நாசம் செய்து விட்டன.

கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான முடக்கம் நடப்பில் உள்ளதால் இந்திய விவசாயிகள் ஏற்கனவே கடுமையான சிரமத்தில் இருக்கின்றனர். வெட்டுக் கிளிகளின் படையெடுப்பு அவர்களை மேலும் சங்கடத்துக்கு ஆளாக்கியிருக்கிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்