Images
  • india covid (3)
    (படம்: AP)

'உருமாற்றம் பெற்றுள்ள கொரோனா கிருமி குறித்த எச்சரிக்கையை இந்தியா பொருட்படுத்தவில்லை'

இந்தியா, உருமாற்றம் பெற்றுள்ள கொரோனா கிருமி குறித்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை என்று அறிவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட கருத்தரங்கு ஒன்றில், உருமாற்றம் பெற்றுள்ள கொரோனா கிருமி குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக, பங்கேற்பாளர்கள், Reuters செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

SARS-CoV-2 Genetics Consortium எனும் அந்தக் கருத்தரங்கு, பொதுச் சுகாதாரத்தைப் பாதிக்கக்கூடிய உருமாற்றம் பெற்ற கிருமிகளை அடையாளம் காணும் நோக்கில் நடத்தப்பட்டது.

தேசிய ஆய்வுக்கூடங்கள் சிலவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொண்ட அந்த நிகழ்வில், B.1.617 ரகக் கொரோனா கிருமி கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அது குறித்து இந்தியாவின் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு நிலையத்திற்கும், உயர் அதிகாரி ஒருவருக்கும் தகவல் அனுப்பப்பட்டதாக நிபுணர்கள் சிலர் குறிப்பிட்டனர்.

இருப்பினும், கிருமிப்பரவலைத் தவிர்ப்பதற்கு மத்திய அரசாங்கம் கடும் நடவடிக்கைகள் எடுப்பது குறித்துப் பரிசீலிக்கவில்லை என்று கூறப்பட்டது.

கருத்தரங்கின் கண்டுபிடிப்புகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடியாக அனுப்பப்பட்டதா என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை.

- Reuters

Top