Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

'ஒரே தேசம், ஒரே அரசமைப்புச் சட்டம்': சுதந்திர தின உரையில் இந்தியப் பிரதமர் மோடி

இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில் ஊழலையும், அநீதியையும் துடைத்தொழிக்கும் நோக்கிலேயே அந்த மாநிலத்துக்கான சிறப்புத் தகுதியை தமது அரசாங்கம் மீட்டுக்கொண்டதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
'ஒரே தேசம், ஒரே அரசமைப்புச் சட்டம்': சுதந்திர தின உரையில் இந்தியப் பிரதமர் மோடி

(படம்: AFP / Prakash SINGH)

இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில் ஊழலையும், அநீதியையும் துடைத்தொழிக்கும் நோக்கிலேயே அந்த மாநிலத்துக்கான சிறப்புத் தகுதியை தமது அரசாங்கம் மீட்டுக்கொண்டதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

இந்தியாவின் 73ஆம் ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் உரையாற்றியபோது அவர் அவ்வாறு கருத்துரைத்தார்.

ஒரே தேசம், ஒரே அரசமைப்புச் சட்டம் எனும் கொள்கைக்கு ஏற்ப, தமது அரசாங்கம் அந்தச் சிறப்புத் தகுதியை மீட்டுக்கொள்ள முடிவெடுத்ததாகத் திரு மோடி கூறினார்.

ஜம்மு-காஷ்மீர் பகுதி இனி அதன் சொந்தச் சட்டங்களை வரைய முடியாது.

அந்த மாநிலத்தின் தன்னாட்சி உரிமையைப் பறிக்கும் வகையில், அதன் சிறப்புத் தகுதியை இந்திய அரசாங்கம் மீட்டுக்கொண்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்