Images
  • India kashmir
    படம்: AP Images

இந்தியா: சர்ச்சைக்குரிய காஷ்மீர் வட்டாரத்தில் இந்தியப் படைகள் தாக்குதல்... 5 கிளிர்ச்சியாளர்கள் மரணம்

இந்திய அரசாங்கப்படைகள் சர்ச்சைக்குரிய காஷ்மீர் வட்டாரத்தில் நடத்திய அதிரடித் தாக்குதல்களில் ஐந்து கிளிர்ச்சியாளர்கள் மாண்டுவிட்டனர்.

அங்கு இரு தரப்பும் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டு வருகின்றன.

நேற்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய வீரர்கள் ஐவர் மரணமடைந்தனர்.

தெற்கில் உள்ள ஷாபியன் (Shopian) வட்டாரத்தைச் சேர்ந்த இமாம்சாஹாப் (Imam-sahab) பகுதியில் கிளர்ச்சியாளர்கள் சரணடைய மறுத்ததை அடுத்து இந்தியப் படையினர் அங்கு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

மற்றொரு மோதலில் இரண்டு கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் வட்டாரத்தில் புதுடில்லியின் ஆட்சியை எதிர்த்து 1989ஆம் ஆண்டில் இருந்து கிளர்சசியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.  

Top