Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

காஷ்மீரில் அதிகரிக்கும் பதற்றம்

இந்தியாவின் காஷ்மீர் வட்டாரத்தில் இராணுவத்தினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நேற்று நடந்த மோதலில் 9 பேர் மாண்டதையடுத்து அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.

வாசிப்புநேரம் -
காஷ்மீரில் அதிகரிக்கும் பதற்றம்

(படம்: AFP)

இந்தியாவின் காஷ்மீர் வட்டாரத்தில் இராணுவத்தினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நேற்று நடந்த மோதலில் 9 பேர் மாண்டதையடுத்து அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.

துருப்பினர் நால்வர், காவல்துறை அதிகாரி ஒருவர், கிளர்ச்சியாளர்கள் மூவர், பொதுமக்களில் ஒருவர் ஆகியோர் நேற்றைய சம்பவத்தில் உயிரிழந்தனர்.

மாண்ட கிளர்ச்சியாளர்களில், பாகிஸ்தானைச் சேர்ந்த அப்துல் ரஷிட் கஸியும் (Abdul Rashid Gazi) ஒருவர் என்று காவல்துறை அதிகாரிகள் கூறினர்.

அந்த ஆடவர் சென்ற வாரம் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேரைப் பலிவாங்கிய குண்டுவெடிப்புத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என்று நம்பப்படுகிறது.

தாக்குதலுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்துள்ளார்.

எல்லையில் தீவிரவாதத்தைச் சமாளிக்க அவர் இராணுவத்திற்கு முழு அதிகாரம் அளித்துள்ளார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்