Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியாவில் வகுப்பறைக்குள் நுழைந்த சிறுத்தை

இந்தியாவில் வகுப்பறைக்குள் நுழைந்த சிறுத்தை

வாசிப்புநேரம் -
இந்தியாவில் வகுப்பறைக்குள் நுழைந்த சிறுத்தை

படம்: Pixabay

மாணவர்கள் மட்டும்தான் வகுப்பறைக்குச் சென்று கல்வி கற்கலாமா?

நானும் செல்வேன் என்றது ஒரு சிறுத்தை...

இந்தியாவின் வடக்குப் பகுதியில் உள்ள அலிகார் (Aligarh) நகரின் பள்ளியொன்றில் நுழைந்த அந்தச் சிறுத்தை அங்குள்ள மாணவர் ஒருவரைத் தாக்கியது.

அந்த மாணவர் சிறிய காயங்களுடன் தப்பியதாக BBC செய்தி நிறுவனம் கூறியது.

வகுப்பறையில் ஒளிந்துகொண்டிருந்த சிறுத்தையைக் கண்டதும் வெளியே ஓடியதாக மாணவர் குறிப்பிட்டார்.

5 வயதாகும் அந்தச் சிறுத்தையை மயக்கமடையச் செய்து பிடிப்பதற்கு 11 மணி நேரமானதாக BBC சொன்னது.

அருகிலுள்ள காட்டிலிருந்து அந்தச் சிறுத்தை பள்ளிக்குச் சென்றிருக்கலாம் என அதிகாரிகள் கூறினர்.

அவற்றின் வசிப்பிடம் சுருங்கிக்கொண்டு இருப்பதால் அவை உணவுதேடி கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் செல்வதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் 12,000க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் உள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்