Images
  • wine shop
    (படம்: REUTERS/Adnan Abidi/File Photo)

இந்தியா: மதுக்கடைகள் மூடப்பட்டதால் கிருமிநாசினியைக் குடித்த 10 பேர் மரணம்

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் Alcohol எனப்படும் சாராயம் கலந்த கிருமிநாசினியைக் குடித்த 10 ஆடவர்கள் இறந்தனர்.

ஆந்திரப் பிரதேசத்தின் குரிச்சேடு என்னும் ஊரில் இச்சம்பவம் நடந்தது.

அங்கு COVID-19 நோய்த்தொற்றுக் கட்டுப்பாடுகளால்
மதுக்கடைகள் மூடப்பட்டன.

மதுப்பழக்கத்திற்கு அடிமையான சிலர் போதைக்காக, கைகளைச் சுத்தம் செய்யப் பயன்படும் கிருமிநாசினியைக் குடித்ததாக அம்மாநிலக் காவல்துறை தெரிவித்தது.

அவ்வாறு கிருமிநாசினி குடித்த சிலர் குணமாகி மருத்துவமனையிலிருந்து வெளியேறிவிட்டதாகவும் மாண்ட சிலருக்கு மற்ற சுகாதாரப் பிரச்சினைகள் இருந்ததாகவும் அது கூறியது.

அம்மாநில அரசாங்கம் பொருளியல் மோசமடைவதைத் தவிர்ப்பதற்காகப் பெரும்பாலான பொருளியல் நடவடிக்கைகள் தொடர, அனுமதி கொடுத்திருந்தது.

இருப்பினும், கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரிக்கும் இடங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் குரிச்சேடும் ஒன்று.

சென்ற மாதத்தில் மட்டும், ஆந்திரப் பிரதேசத்தில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் 9 மடங்கு அதிகரித்தன.

இந்தியாவில் ஆக அதிகக் கிருமித்தொற்றுச் சோதனைகளை நடத்தும் மாநிலமும் அதுவே. 

Top