Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: 'சட்டி, பானைகளைக் கொண்டு சத்தம் போட்டு வெட்டுக்கிளிகளை வீட்டை விட்டு விரட்டுங்கள்'

இந்தியா: 'சட்டி, பானைகளைக் கொண்டு சத்தம் போட்டு வெட்டுக்கிளிகளை வீட்டை விட்டு விரட்டுங்கள்'

வாசிப்புநேரம் -

இந்தியாவில் சில மாதங்களாக, கிராமப்புறங்களில் படையெடுத்த வெட்டுக்கிளிகள், இப்போது நகர்ப்புறங்களை நோக்கித் திரும்பியுள்ளன.

தலைநகர் புது டில்லியின் புறநகர்ப் பகுதியான குர்காவ்னில், வெட்டுக்கிளிகள் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளன.

பூச்சிகள் வீடுகளுக்குள் செல்வதைத் தவிர்க்க, குடியிருப்பாளர்கள் தங்கள் வீட்டுச் சன்னல்களை மூடியே வைத்திருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பூச்சிகள் வீடுகளை நெருங்கினால், சட்டி,பானைகளைக் கொண்டு சத்தம் போட்டு, அவற்றை விரட்டும்படி அதிகாரிகள் ஆலோசனை விடுத்துள்ளனர்.

குர்காவ்ன் புறநகர்ப் பகுதிக்கு அருகில்தான், புதுடில்லி அனைத்துலக விமான நிலையம் அமைந்துள்ளது.

ஆகவே, விமானிகள், விமான நிலையத்திலிருந்து புறப்படும்போதும், விமானத்தைத் தரையிறக்கும்போதும், அதிக கவனத்துடன் செயல்படும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

நகரின் வெட்டுக்கிளிக் கூட்டங்களைப் படமெடுத்து Twitter-இல் பதிவேற்றம் செய்த சிலர், அரசாங்கம் அவற்றைக் கட்டுப்படுத்தவில்லை என்று குறைகூறியுள்ளனர்.

குர்காவ்ன் நகர்ப்புறத்தில் இதுவரை வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு நடந்ததில்லை.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்