Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியாவில் படையெடுத்துள்ள வெட்டுக்கிளிக் கூட்டங்கள்; மனமுடைந்துள்ள விவசாயிகள்

இந்தியாவில் படையெடுத்துள்ள வெட்டுக்கிளிக் கூட்டங்கள் பயிர்களை நாசமாக்குக்கின்றன.

வாசிப்புநேரம் -
இந்தியாவில் படையெடுத்துள்ள வெட்டுக்கிளிக் கூட்டங்கள்; மனமுடைந்துள்ள விவசாயிகள்

(படம்: AFP / Vishal Bhatnagar)

இந்தியாவில் படையெடுத்துள்ள வெட்டுக்கிளிக் கூட்டங்கள் பயிர்களை நாசமாக்குக்கின்றன.

ராஜஸ்தானும் மத்தியப் பிரதேசமும் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில், 8-லிருந்து 10 வெட்டுக்கிளிக் கூட்டங்கள் உள்ளன.

அவை ஏற்கனவே சுமார் 50,000
ஹெக்டர் நிலத்துப் பயிரை அழித்துள்ளன.

(படம்: AFP/Banaras KHAN)

ஆளில்லா வானூர்திகள், கார்கள் போன்றவற்றைக் கொண்டு, வெட்டுக்கிளிக் கூட்டங்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.

அவை மீது பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்படுகிறது.

40 மில்லியன் வெட்டுக்கிளிகள் கொண்ட ஒரு கூட்டம், சுமார் 35,000 பேர் சாப்பிடும் அளவிற்கு இணையாகச் சாப்பிடலாம்.

COVID-19 கிருமித்தொற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், இப்போது தங்கள் பயிர்கள் அழிவதைப் பார்த்து மனமுடைந்திருக்கின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்