Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

புது டில்லி: அடாத காற்றுத் தூய்மைக்கேட்டுக்கு இடையிலும் விடாது நடைபெறவுள்ள ஓட்டப்போட்டி

புதுடில்லியில் நடைபெறவிருக்கும் பாதி நெடுந்தொலைவோட்டப் போட்டிகளில், உலகின் முன்னணி நெடுந்தொலைவோட்ட வீரர்களும் நூற்றுக்கணக்கான உள்ளூர்வாசிகளும் கலந்துகொள்ளவிருப்பதாக, அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -

புதுடில்லியில் நடைபெறவிருக்கும் பாதி நெடுந்தொலைவோட்டப் போட்டிகளில், உலகின் முன்னணி நெடுந்தொலைவோட்ட வீரர்களும் நூற்றுக்கணக்கான உள்ளூர்வாசிகளும் கலந்துகொள்ளவிருப்பதாக, அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்.

பந்தயத்தில் கலந்துகொள்ளவிருக்கும் பொதுமக்கள் 10, 5 கிலோமீட்டர் தூரப் பந்தயங்களில் ஏதேனும் ஒன்றைத் தெரிவு செய்து, இம்மாதம் 25இலிருந்து 29ஆம் தேதி வரை அதில் கலந்துகொள்ளலாம்.

திறன்பேசிச் செயலி ஒன்றில், தாங்கள் ஓடி முடித்த நேரத்தை அவர்கள் பதிவு செய்யவேண்டும்.

புதுடில்லியில் காற்றுத் தூய்மைக் கேடு, கொரோனா கிருமிப்பரவல் ஆகியவை கடுமையாகிவரும் நிலையில், ஓட்டப்பந்தயம் நடைபெறவிருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் போட்டியை நடத்துவது குறித்து மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காற்றில் நச்சுத் தன்மை அதிகமாக இருக்கும்போதும், கிருமி வேகமாகப் பரவிவரும் நிலையிலும் இந்த ஓட்டப் பந்தயத்திற்கு ஏற்பாடு செய்வது பொறுப்பற்ற செயல்!

அது மக்களிடையே பொய்யான பாதுகாப்பான உணர்வை உருவாக்குகிறது.

என்றார் 350,000 மருத்துவர்களின் பிரதிநிதியான இந்திய மருத்துவச் சங்கச் செயலாளர் RV அசோகன்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்