Images
  • adani ports
    படம்: AFP

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகியவற்றிலிருந்து வரும் சரக்குகளைக் கையாள மறுத்தது இந்தியாவின் ஆகப் பெரிய துறைமுக நிறுவனம்

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து அனுப்பப்படும் சரக்குகளை ஏற்றுக்கொள்ள இந்தியாவின் ஆகப் பெரிய துறைமுக நிறுவனமான அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தனது குழுமத்தின்கீழ் இயங்கும் அனைத்துத் துறைமுகங்களுக்கும் புதிய வர்த்தக ஆலோசனை பொருந்தும் என்றது அது.

அடுத்த மாதம் 15ஆம் தேதியிலிருந்து அது நடப்புக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.

சென்ற மாதம், ஆப்கானிஸ்தானிலிருந்து அனுப்பப்பட்ட சரக்குக் கப்பல்களில் சுமார் 3 டன் அளவு போதைமிகு அபின் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ஏறக்குறைய 2.65 பில்லியன் டாலர்.

அதே வேளையில், சென்ற மாதம், ஈரானியக் கப்பலில் சுமார் 20 மில்லியன் டாலர் பெறுமான போதைமிகு அபின் பறிமுதல் செய்யப்பட்டது.

குஜராத் கடற்கரைக்கு அப்பால் இந்திய அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 6 ஈரானியர்கள் பிடிபட்டனர்.

எனினும், தனது துறைமுகங்களின் வழி செல்லும் சரக்குகள் அனைத்தையும் சோதிப்பதற்கான அதிகாரம் தனக்கு இல்லை என்று அதானி குழுமம் குறிப்பிட்டது.

ரஷ்யா, சீனா, ஈரான், பாக்கிஸ்தான் ஆகியவற்றின் வழியே போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. அதே வேளையில் அந்த நாடுகளில், ஆப்கானிஸ்தானிலிருந்து கடத்தப்படும் போதைப்பொருள்களுக்கான பெரும் சந்தை உள்ளதாகவும் நம்பப்படுகிறது.   

Top