Images
  • India
    படம்: AFP / Jewel SAMAD

இந்தியா: புதிதாக 94,000க்கும் அதிகமானோர் நோய்த்தொற்றால் பாதிப்பு; 1,100க்கும் மேலானோர் மரணம்

இந்தியாவில் இன்று புதிதாக 94,000க்கும் அதிகமானோர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.7 மில்லியனைத் தாண்டியுள்ளது. மேலும் 1,114 பேர் மாண்டனர். அவர்களையும் சேர்த்து
கிருமித்தொற்றால் சுமார் 78,500 பேர் உயிரிழந்ததாக இந்தியச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மகாராஷ்டிரா மாநிலம் ஆக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்திலும், நாட்டின் தலைநகர் புதுடில்லியிலும் அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அமெரிக்காவிற்கு அடுத்து இந்தியா தான் நோய்த்தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாள்களில் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 மில்லியனைக் கடந்துவிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

Top