Images
  • babies switched (1)

இந்தியா: கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட அன்னையருக்கு ஆரோக்கியமாகப் பிறந்த குழந்தைகள்

இந்தியாவின் மும்பை நகரிலுள்ள ஒரு மருத்துவமனையில், கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்ட அன்னையர் பலர், ஆரோக்கியமான குழந்தைகளை ஈன்றெடுத்துள்ளனர்.

லோகமான்ய திலக் அரசாங்க மருத்துவமனையில், அவ்வாறு 115 குழந்தைகள் பிறந்துள்ளதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அதில் மூன்று குழந்தைகளுக்கு, ஆரம்பத்தில் கிருமித்தொற்று இருப்பதாகத் தெரியவந்தது.

ஆனால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குழந்தைகள் கிருமித்தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதியானது.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் இருவர் மருத்துவமனையில் மாண்டனர். அவர்களில் ஒருவர், குழந்தை பிறக்கும் முன்னரே உயிரிழந்தார்.

மும்பையில் உள்ள சீயோன் மருத்துவமனையில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட பாதிக்கும் அதிகமான கர்ப்பிணிகளுக்கு அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.

56 ஆண் குழந்தைகளும் 59 பெண் குழந்தைகளும் அங்கே பிறந்தன.

கிருமித்தொற்றால் மும்பை மாநகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கே, 20,000க்கும் அதிகமானோர் கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கிருமித்தொற்றால் 730க்கும் அதிகமானோர் மடிந்தனர்.  

Top