Images
  • india (8)
    படம்: AFP

COVID-19: இந்தியாவில் booster தடுப்பூசி போட இப்போதைக்கு எந்தத் திட்டமும் இல்லை

இந்தியாவில் COVID-19 நோய்த்தொற்றுக்கு எதிராக booster தடுப்பூசி போட இப்போதைக்கு எந்தத் திட்டமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அதிகமானோர் இயற்கையாகவே நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதால் இரண்டு முறை தடுப்பூசி போட்டுக்கொள்வது போதுமான பாதுகாப்பைத் தரும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.

booster தடுப்பூசி குறித்து இந்தியச் சுகாதார அமைச்சு அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் வெளியிடவில்லை.

இந்தியாவில் இப்போது COVID-19 தடுப்பூசிகளுக்கு எந்தத் தட்டுப்பாடும் இல்லை.

அதனால் மேற்கத்திய நாடுகள் போலவே எளிதில் பாதிக்கக்கூடியவர்களுக்கு booster தடுப்பூசி போடலாம் என்று சுகாதார நிபுணர்களும், மருத்துவர்களும் இந்திய அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறியுள்ளனர்.

பெரியவர்கள் அனைவரும் ஜனவரி மாதத்திற்குள் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்பதில் இந்தியா தீவிரமாக உள்ளது.

இந்தியாவில் தடுப்பூசி போடத் தகுதியானவர்களில் 81 விழுக்காட்டினர் ஒரு முறையாவது தடுப்பூசி போட்டுள்ளனர்.

43 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுள்ளனர்.

இந்தியாவில் இன்னும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்குத் தடுப்பூசி போடப்படவில்லை.

-Reuters/kg 

Top