Images
  • india population
    (படம்: AFP)

8 ஆண்டுகளில் உலகின் ஆக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா திகழும்: ஐக்கிய நாட்டு நிறுவனம்

உலகின் ஆக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா, இன்னும் 8 ஆண்டுகளில் உருவாகும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

'The World Population Prospects 2019: Highlights' என்னும் அறிக்கையில் சீனாவின் மக்கள்தொகையை இந்தியா மிஞ்சும் என்று உலக நிறுவனம் முன்னுரைத்துள்ளது.

உலக மக்கள் தொகை 2050ஆம் ஆண்டில் 9.7 பில்லியனை எட்டும் என்றும் அது கூறியுள்ளது.

அப்போது உலக மக்கள் தொகையில் பாதி, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ, அமெரிக்கா, எகிப்து, இந்தோனேசியா, எத்தியோப்பியா, தான்ஸேனியா ஆகிய 9 நாடுகளில் இருப்பர்.

அதே நேரத்தில் சீனாவின் மக்கள் தொகை 2.2 விழுக்காடு குறையும் என்று அறிக்கை குறிப்பிட்டது.

தற்போது மனிதர்களின் சராசரி ஆயுள் காலம் 72.6 ஆண்டுகளாக உள்ளது.

2050ஆம் ஆண்டு அது 77.1 ஆக உயருமென்று ஐக்கிய நாட்டு நிறுவனம் முன்னுரைத்தது. ஒப்புநோக்க, 1990இல் மனிதர்களின் சராசரி ஆயுள்காலம் 64.2 ஆண்டுகளாக இருந்தது.
 

Top