Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சர்ச்சைக்குரிய விளம்பரத்தால் சமூக ஊடகத்தில் மோதும் இந்திய-பாகிஸ்தான் மக்கள்

பாகிஸ்தான் அண்மையில் வெளியிட்ட தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றால் தற்போது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

வாசிப்புநேரம் -

பாகிஸ்தான் அண்மையில் வெளியிட்ட தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றால் தற்போது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

அதைத் தொடர்ந்து இருநாட்டு மக்களும் சமூக ஊடகங்களில் மாறிமாறித் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பாகிஸ்தான் தொலைக்காட்சி தயாரித்த விளம்பரத்தில் இந்திய இராணுவ வீரர் அபிநந்தனைக் கேலி செய்வதுபோல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.

அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியச் சமூக ஊடகத்தினரும் சில விளம்பரங்களைத் தயாரித்து வெளியிட்டுவருகின்றனர்.

பாகிஸ்தானின் விளம்பரம் இந்தியக் கிரிகெட் அணியைக் குறிவைத்து நகைச்சுவையாகத் தயாரிக்கப்பட்டது என்று சிலர் கூறினர்.

கடந்த பிப்ரவரி மாதம் இருநாடுகளுக்கிடையே பெரும் பதற்றம் நிலவியது. அதைத் தொடர்ந்து போர் விமானி அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தானியப் படையினரால் கைதுசெய்யப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்