Images
  • gold
    படம்: AFP

இந்தியா: பணப் பற்றாக்குறையால் நகைகளை அடகு வைத்துக் கடன் பெறுகின்றனர் பலர்

இந்தியாவின் சில பகுதிகளில், நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க, தங்க நகைகளை அடகுவைத்தோ விற்றோ பணம் பெறுகின்றனர் பலர்.

அங்கு வர்த்தகங்களும் வேலைகளும் கிருமித்தொற்றால் பாதிப்படைந்துள்ள வேளையில், பலர் பணம் இல்லாமல் சிரமப்படுவதாக ஆய்வொன்று கூறுகிறது.

கடந்த ஓராண்டில் இந்தியாவில் மூடப்பட்ட வர்த்தகங்களினால் 230 மில்லியனுக்கும் மேற்பட்டோர் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டதாக Azim Premji பல்கலைக்கழகம் நடத்திய அந்த ஆய்வு காட்டுகிறது.

பலரும் வாடகை, பள்ளிக் கட்டணம், மருத்துவக் கட்டணம் எனப் பலவற்றுக்குப் பணமின்றித் திண்டாடுவதாக அது குறிப்பிட்டது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ள மின்சாரக் கட்டணம், எரிவாயுக் கட்டணம் முதலியவை பலரைக் கவலையில் ஆழ்த்தியுள்ளதாகக் கூறப்பட்டது.

அதனால், சில குடும்பங்கள் தங்க நகைகளை விற்றுப் பணத்தைப் பெறுகின்றனர்; அல்லது, தங்க நகைகளை அடைமானமாக வைத்துக் கடன் வாங்குகின்றனர்.

இவ்வாண்டின் முதல் 8 மாதத்தில் மட்டும், ஏறக்குறைய 4.71 டிரில்லியன் ரூபாய் (64 பில்லியன் டாலர்) மதிப்புள்ள தங்கநகைகள் அடைமானம் வைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டது இந்திய மத்திய வங்கி. முந்திய ஆண்டைவிட அது 74 விழுக்காடு அதிகம்.  

Top