Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: புதுடில்லியில் கடுமையாகும் காற்றுத் தூய்மைக்கேடு - மீண்டும் பள்ளிகள் மூடப்படும்

இந்தியத் தலைநகர் புதுடில்லியில், காற்றுத் தூய்மைக்கேடு மோசமடைந்திருப்பதால், மீண்டும் பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்படவுள்ளன. 

வாசிப்புநேரம் -
இந்தியா: புதுடில்லியில் கடுமையாகும் காற்றுத் தூய்மைக்கேடு - மீண்டும் பள்ளிகள் மூடப்படும்

(கோப்புப் படம்: AP/Altaf Qadri)

இந்தியத் தலைநகர் புதுடில்லியில், காற்றுத் தூய்மைக்கேடு மோசமடைந்திருப்பதால், மீண்டும் பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்படவுள்ளன.

காற்றுத் தூய்மைக் கேடு மக்களை மூச்சுத் திணற வைத்திருக்கும் சூழலில், மாநில அரசாங்கம் கல்வி நிலையங்களைத் திறக்க முடிவெடுத்தது. அதைக் கண்டித்த உச்ச நீதிமன்றம், அவற்றைத் தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளது.

கல்வி நிலையங்களை மீண்டும் திறக்க சென்ற வாரம், மாநில அதிகாரிகள் முடிவெடுத்தது வியப்பளித்ததாக நீதிமன்றம் கூறியது.

புதுடில்லியில் காற்றுத் தூய்மைக் கேடு மோசமடைந்திருப்பதால், பள்ளிகளும், கல்லூரிகளும் இரண்டு வாரம் மூடப்பட்டன.

காற்றின் தரத்தை மேம்படுத்துவதில், அரசாங்கத்தின் இயலாமையைச் சுட்டிக்காட்டித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது.

அத்தியாவசிமற்ற காரணங்களுக்காக டீசல் வாகனங்கள் புதுடில்லியில் நுழைவதற்கும், கட்டுமானப் பணிகளுக்கும் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

தனியார் வாகனங்களுக்குப் பதிலாக, பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இயற்கை எரிவாயுவில் செயல்படும் நூற்றுக்கணக்கான
பேருந்துகள் அங்கு இயக்கப்படுகின்றன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்