Images
  • india (8)
    படம்: AFP

மின்சார விநியோகத்தில் எந்தச் சிக்கலும் இல்லை - இந்திய அரசாங்கம்

இந்தியாவிடம் போதுமான அளவு நிலக்கரி இருப்பதாகவும் மின்சார விநியோகத்தில் எந்தச் சிக்கலும் இல்லை என்றும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

புதுடில்லி உட்பட சில நகரங்களில் மின்சாரத் தடை ஏற்படாது, மக்கள் பயப்பட வேண்டாம் என்றும் அது கேட்டுக்கொண்டது.

தற்போது சுமார் 7.2 மில்லியன் டன் நிலக்கரி இருப்பில் உள்ளதாகவும் அது 4 நாளுக்குப் போதுமானது என்றும் நிலக்கரி அமைச்சு தெரிவித்தது.

அரசாங்கத்திற்குச் சொந்தமான Coal India நிறுவனத்திடம் 40 மில்லியன் டன்னுக்கு மேல் நிலக்கரி உள்ளதாகவும் அது கூறியது.

அண்மைக் காலமாக இந்தியாவின் சில பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்படுகிறது.

மின்சார உற்பத்தி ஆலைகளில் இருப்பும் குறையத்தொடங்கியுள்ளது.

இந்தியாவில் சுமார் 70 விழுக்காடு மின்சாரம் நிலக்கரியைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

பருவமழை அதிகமாக பெய்ததால் நிலக்கரிச் சுரங்கங்களில் வெள்ளம் ஏற்பட்டது, போக்குவரத்திலும் சிரமங்கள் ஏற்பட்டன, அதனால் உள்ளூர் அளவில் நிலக்கரிக்கான விலை உயர்ந்தது.

அனைத்துலக அளவிலும் நிலக்கரியின் விலை இப்போது அதிகரித்துள்ளது.

- AFP/jt
 

Top