Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியாவில் மின்சார விநியோகத்தில் தடை ஏற்படக்கூடும்

இந்தியாவில் மின்சார விநியோகத்தில் தடை ஏற்படக்கூடும்

வாசிப்புநேரம் -
இந்தியாவில் மின்சார விநியோகத்தில் தடை ஏற்படக்கூடும்

படம்: Pixabay

இந்தியாவில் மின்சார விநியோகத்தில் தடை ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

புதுடில்லியில் உள்ள இரண்டு மின் உற்பத்தி ஆலைகளுக்கு எரிவாயு வழங்கப்போவதாக இந்திய எண்ணெய் அமைச்சு தெரிவித்துள்ளது.

நிலக்கரித் தட்டுப்பாட்டால் மின்சார விநியோக நெருக்கடி ஏற்படக்கூடும் என்று புதுடில்லி மாநில முதலமைச்சர் எச்சரித்திருந்தார்.

இந்தியாவின் கிழக்கு, வடக்கு மாநில மக்கள் 14 மணிநேரம் வரை மின்சாரத் தடையை எதிர்நோக்குகின்றனர்.

டில்லியில் உள்ள இரண்டு மின்சார உற்பத்தி ஆலைகள் தொடர்ந்து செயல்படத் தேவையான நிலக்கரி இருப்பதை உறுதி செய்ய முயல்வதாக மாநில மின்சார உற்பத்திக் கழகம் கூறியது.

இந்தியாவில் நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் பாதிக்கும் மேற்பட்ட ஆலைகளில் மூன்று நாளுக்கும் குறைவான நிலக்கரியே இருப்பில் உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நிலக்கரியில் செயல்படும் 135 ஆலைகள் உள்ளன. அவற்றின் மூலம் சுமார் 70 விழுக்காட்டு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.

COVID-19 இரண்டாம் அலைக்குப் பிறகு, தொழிற்சாலைகளுக்கான மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்