Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: சொந்த ஊர்களுக்கு திரும்பிய மில்லியன் கணக்கான வெளிமாநில ஊழியர்கள்

இந்தியாவில் COVID-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நேரத்தில் மில்லியன் கணக்கான வெளிமாநில ஊழியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.

வாசிப்புநேரம் -

இந்தியாவில் COVID-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நேரத்தில் மில்லியன் கணக்கான வெளிமாநில ஊழியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.

அதனால், போதிய மருத்துவ வசதிகள் இல்லாத கிராமப் பகுதிகளில் கிருமிப் பரவல் அதிகரிக்குமோ என்ற கவலை எழுந்துள்ளது.

COVID-19 கிருமித்தொற்று காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து முடக்கம் நடப்பில் உள்ளது. அதனால் வருமானம் ஈட்டமுடியாத பல மில்லியன் ஊழியர்கள் நடந்தும், சைக்கிளிலும் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டனர்.

ரயில் பயணங்களும் சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.

பெரிய நகரங்களில் இருந்து சுமார் 4.5 மில்லியன் ஊழியர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியதாக இந்திய உள்துறை, ரயில்வே அமைச்சுகள் கூறின.

இருப்பினும் இன்னும் சில மில்லியன் கணக்கான ஊழியர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பயண வசதிகள் இல்லாமல் தவிப்பதாக கவனிப்பாளர்கள் தெரிவித்தனர்.

தற்போது இந்தியாவில் 145,380 பேர் COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

4,167 பேர் மாண்டனர்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்