Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியாவின் சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டம்: தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்

இந்தியாவில் சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன.

வாசிப்புநேரம் -
இந்தியாவின் சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டம்: தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்

படம்: AFP

இந்தியாவில் சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன.

அஸ்ஸாமில் நேற்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தீப்பந்தங்களை ஏந்தி வீதிகளில் அணிவகுத்தனர்.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்தால் குடியேறிகள் அதிகமான எண்ணிக்கையில் வரக்கூடும், அது தங்கள் மாநிலத்தின் கலாசாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.

அஸ்ஸாமியர்கள் என்பதில் தங்களுக்குப் பெருமை என்று குறிப்பிட்டனர் ஆர்ப்பாட்டக்காரர்கள்.

குடியுரிமைச் சட்டத் திருத்தம் அஸ்ஸாமிற்குப் பொருந்தாது என்று கூறிய அவர்கள், எந்தச் சூழலிலும் அதனை ஏற்கமுடியாது என்று மத்திய அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தனர்.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு இந்திய நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியதிலிருந்து பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன.

இருபதுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டங்களின்போது மாண்டுவிட்டனர்.

புதிய சட்டத்தை எதிர்த்துச் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களை இந்திய உச்ச நீதிமன்றம் இம்மாதம் 20ஆம் தேதி பரிசீலனை செய்யவிருக்கிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்