Images
  • India flood
    கோப்புப்படம்:  AP Images

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் திடீர் வெள்ளம் - 30 பேர் மரணம்

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 30 பேர் மாண்டனர்.

பலரைக் காணவில்லை.

தேடல் மீட்புப் பணிகள் தொடர்வதாகக் கூறிய அதிகாரிகள், மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சுகின்றனர்.

வியாழக்கிழமையிலிருந்து கனத்த மழை பெய்து வருவதால், குறைந்தது 5 மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

வெள்ளத்தில் சிக்கிய 3 பேருந்துகளில் இருந்த சுமார் 12 பயணிகள் மாண்டனர்.

3 கட்டடங்கள் சரிந்து விழுந்ததில் மூவர் மாண்டனர்.

அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.

இருப்பினும் பல பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், மேலும் பலர் வீட்டிலேயே சிக்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Top