Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: பாலியல் பலாத்கார வழக்கில் சாட்சியமளிக்க நீதிமன்றம் சென்ற பெண்ணைத் தீவைத்துக் கொல்ல முயற்சி

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 23 வயதுப் பெண் நீதிமன்றத்திற்குச் சாட்சியமளிக்கச் சென்று கொண்டிருந்தபோது தீ வைத்துக் கொளுத்தப்பட்டார்.

வாசிப்புநேரம் -
இந்தியா: பாலியல் பலாத்கார வழக்கில் சாட்சியமளிக்க நீதிமன்றம் சென்ற பெண்ணைத் தீவைத்துக் கொல்ல முயற்சி

(படம்: TODAY )

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 23 வயதுப் பெண் நீதிமன்றத்திற்குச் சாட்சியமளிக்கச் சென்று கொண்டிருந்தபோது தீ வைத்துக் கொளுத்தப்பட்டார்.

அவர் கடந்த மார்ச் மாதம் இரண்டு ஆடவர்கள் தம்மைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகப் புகார் கொடுத்திருந்தார்.

அந்த வழக்கு தொடர்பாக அந்தப் பெண் நீதிமன்றம் செல்லும் வழியில் தாக்கப்பட்டுள்ளார்.

தற்போது அந்தப் பெண் உயிருக்குப் போராடுவதாக அதிகாரிகள் கூறினர்.

தாக்குதல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இரண்டு பேர் அந்தப் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவர்கள்.

கடந்த சில வாரங்களாக இந்தியாவில் பாலியல் பலாத்காரம் தொடர்பாகப் போராட்டங்கள் நடந்துவருகின்றன.

இந்தியாவில் 2017ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் தொடர்பாக 33,658 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், நாள் ஒன்றுக்கு 92 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்