Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கடந்து வர முடியாத கலவரக் காட்சிகள்...

ஆயுதங்கள் ஏந்திய ஆடவர்கள், ஒரு சந்தைக்குத் தீவைக்க, அருகில் இருந்த காவல் நிலையத்திலிருந்து யாரும் அதைத் தடுக்க வராத காட்சி முகமது ரஷீதின் கண்களில் நிற்கிறது.

வாசிப்புநேரம் -
கடந்து வர முடியாத கலவரக் காட்சிகள்...

( படங்கள்: AFP)

ஆயுதங்கள் ஏந்திய ஆடவர்கள், ஒரு சந்தைக்குத் தீவைக்க, அருகில் இருந்த காவல் நிலையத்திலிருந்து யாரும் அதைத் தடுக்க வராத காட்சி முகமது ரஷீதின் கண்களில் நிற்கிறது.

பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஆர்பாட்டக்காரர்கள் தம் காரையும் கொளுத்தியதாகச் சொல்கிறார்.

கடந்த சில நாள்களாகப் புதுடில்லியில் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் வெடித்த வன்முறை பல ஏழ்மையான குடியிருப்புகளைப் பாதித்துள்ளது.

புதிதாக அறிவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய குடியுரிமைத் திருத்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்று கூறி, புதுடில்லியில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

அந்தச் சட்டத்துக்கு ஆதரவானவர்களும் போராட்டத்தில், அது ஒரு கட்டத்தில் வன்முறையாக உருவெடுத்தது.

புதுடில்லியில் ஏற்பட்ட ஆக மோசமான கலவரமாகக் கருதப்படும் சம்பவத்தில் 32 பேர் மாண்டனர், சுமார் 200 பேர் காயமடைந்தனர்.


இந்துக்கள், முஸ்லிம்கள் இரு சாராரும் வீடுகள் கற்களால் தாக்கபட்டதாகக் கூறினர்.

AFP இடம் பேசிய பலர், இனக் கலவரம் தங்கள் நகரில் ஏற்படும் என்று எதிர்பார்க்கவே இல்லை என்று கூறினர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்