Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: காவல்துறையால் தடுத்துவைக்கப்பட்டபோது அப்பா- மகன் மரணம் - நியாயம்கோரும் இணையவாசிகள்

இந்தியா: காவல்துறையால் தடுத்துவைக்கப்பட்டபோது அப்பா- மகன் மரணம் - நியாயம்கோரும் இணையவாசிகள்

வாசிப்புநேரம் -
இந்தியா: காவல்துறையால் தடுத்துவைக்கப்பட்டபோது அப்பா- மகன் மரணம் - நியாயம்கோரும் இணையவாசிகள்

படம்: Facebook Screenshot

இந்தியாவில், காவல்துறையினரால் தடுத்துவைக்கப்பட்டபோது, இருவர் மாண்டதை அடுத்து ஆயிரக்கணக்கானோர் சமூக ஊடகங்களில் சினத்தை வெளிப்படுத்தும் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

இம்மாதம் 19-ஆம் தேதி வெள்ளிக்கிழமை, தமிழகத்தின் தூத்துகுடிக்கு அருகில் உள்ள சாத்தான்குளம் என்னும் ஊரில் அப்பா-மகனான, J. ஜெயராஜும், பென்னிக்ஸ் இம்மானுவெலும் கிருமித்தொற்றுக்கு எதிரான கட்டுப்பாடுகளை மீறியதாகக் கூறிக் கைதாயினர்.

காவல்துறை வசம் இருந்தபோது அவர்கள் இருவரும் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

31 வயது மகன் பென்னிக்ஸ், திங்களன்று மூச்சுத்திணறல் காரணமாக மாண்டார் எனக் காவல்துறை தெரிவித்தது.

அதற்கு மறுநாள் 59 வயதுத் தந்தை ஜெயராஜ் மாண்டதாகக் கூறப்பட்டது.

மாநில முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் இருவரைத் தற்காலிகமாகப் பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

மாண்ட இருவருக்கும் நியாயம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, ஆயிரக்கணக்கானோர் #JusticeforJayarajandBennix எனும் குறியீட்டுடன் Twitter-இல் பதிவிட்டுள்ளனர்.

பலர், சம்பவத்தை, அமெரிக்காவில், காவல்துறை நடவடிக்கையால் மாண்ட கறுப்பின ஆடவர், ஜார்ஜ் ஃபுளோய்டுடன் (George Floyd) ஒப்பிட்டனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்