Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இலோன் மஸ்க்கின் Starlink இணையச்சேவைக்கு முந்திக்கொண்டு முன்பதிவு செய்யும் இந்தியர்கள்- எச்சரிக்கும் அரசாங்கம்

இந்தியாவில் இலோன் மஸ்க்கின் Starlink இணையச் சேவைகள் செயல்படுவதற்கு இன்னும் உரிமம் வழங்கப்படாத நிலையில், அவற்றைப் பெற முன்பதிவு செய்யவேண்டாம் என்று அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

வாசிப்புநேரம் -
இலோன் மஸ்க்கின் Starlink இணையச்சேவைக்கு முந்திக்கொண்டு முன்பதிவு செய்யும் இந்தியர்கள்- எச்சரிக்கும் அரசாங்கம்

(கோப்புப் படம் : AFP)

இந்தியாவில் இலோன் மஸ்க்கின் Starlink இணையச் சேவைகள் செயல்படுவதற்கு இன்னும் உரிமம் வழங்கப்படாத நிலையில், அவற்றைப் பெற முன்பதிவு செய்யவேண்டாம் என்று அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

உலகின் ஆகப் பெரும் செல்வந்தரான இலோன் மஸ்க் (Elon Musk) நிர்வகிக்கும் SpaceX நிறுவனத்தின் ஒரு பிரிவு Starlink இணையச் சேவை.

செயற்கைக்கோள் வாயிலாக இணையச் சேவைகள் வழங்கும் அந்த நிறுவனம், இம்மாதத் தொடக்கத்தில் அதன் சேவைகளை இந்தியாவில் அதிகாரபூர்வமாகப் பதிவுசெய்தது.

அதையடுத்து, அங்கு, Starlink, அதன் சேவைகளுக்கான விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. அது தனது சேவைகளை ஏற்கனவே விற்கத் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் மக்கள் முந்திக்கொண்டு அதன் சேவைகளுக்கு முன்பதிவு செய்துவருகின்றனர்.

கட்டுப்பாடுகளை பின்பற்றும்படி நிறுவனத்துக்கு அறிக்கை விடுத்திருப்பதாக அரசாங்கம் சொன்னது.

- AFP 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்