Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

புதுவகை COVID-19 கிருமி - விழிப்புநிலையில் இந்தியா

புதுவகை COVID-19 கிருமி - விழிப்புநிலையில் இந்தியா

வாசிப்புநேரம் -
புதுவகை COVID-19 கிருமி - விழிப்புநிலையில் இந்தியா

படம்: AFP

தென்னாப்பிரிக்காவில் புதுவகை COVID-19 கிருமி அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து இந்தியா விழிப்புநிலையில் உள்ளது.

வெளிநாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு நோய்த்தொற்றுப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசாங்கம் அதன் எல்லா மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

அண்மையில்தான் இந்தியா வெளிநாட்டுப் பயணிகளுக்கான சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது.

புதுவகை COVID-19 கிருமியான B.1.1.529 பொதுச் சுகாதாரத்திற்கு பெரும் நெருக்கடி ஏற்படுத்தக்கூடும் என்று இந்தியா அஞ்சுகிறது.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் தடுப்புமருந்துகள், புதுவகைக் கிருமிக்கு எதிராகக் குறைந்த செயல்திறனைக் கொண்டிருக்கலாம் என பிரிட்டன் கவலை தெரிவித்துள்ளது.

புதுவகைக் கிருமி காரணமாக பிரிட்டன் உள்ளிட்ட சில உலக நாடுகள் 6 ஆப்பிரிக்க நாடுகளுக்கு எதிராகப் பயணத்தடையை விதித்துள்ளன.
-Reuters/dv 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்