Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சில நாடுகளுடன் இருதரப்புப் பயணங்களைத் தொடரத் திட்டமிடும் இந்தியா

இந்தியா, சில நாடுகளுடன் இருதரப்புப் பயணங்களைத் தொடர திட்டமிடுகிறது.

வாசிப்புநேரம் -
சில நாடுகளுடன் இருதரப்புப் பயணங்களைத் தொடரத் திட்டமிடும் இந்தியா

(படம்: AFP)

இந்தியா, சில நாடுகளுடன் இருதரப்புப் பயணங்களைத் தொடர திட்டமிடுகிறது.

கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு முக்கியப் பயணங்களை மேற்கொள்ள இந்தியா அனுமதிக்கும்.

இந்தியாவிலிருந்து செல்லும் சிறப்பு விமானங்களுக்கு அமெரிக்கா கட்டுப்பாடு விதித்தது.

அதைத் தொடர்ந்து, வேறு சில நாடுகளுக்கு இருவழிப் பயணங்களை அனுமதிக்க முடிவெடுத்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள தனது குடிமக்களை அழைத்துச் செல்ல Air India போன்ற சிறப்பு விமானங்களுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கியது.

ஆனால், அமெரிக்காவின் சிறப்பு விமானங்களுக்கு இந்தியா அனுமதி மறுத்தது.

அது, அநியாயமான, பாரபட்சமான நடைமுறை என்று அமெரிக்கா குறைகூறியது.

இந்திய அரசாங்கம், இம்மாத இறுதி வரை வெளிநாட்டு விமானச் சேவைகளுக்குத் தடை விதித்துள்ளது.

அது நீட்டிக்கப்படுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்