Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்திய மாநிலத்தில் கிராமவாசிகளுக்குத் தடுப்பூசி போடப் பாறைகள் ஏறி, பல மணி நேரம் நடக்கும் மருத்துவர்கள்

இந்திய மாநிலத்தில் கிராமவாசிகளுக்குத் தடுப்பூசி போடப் பாறைகள் ஏறி, பல மணி நேரம் நடக்கும் மருத்துவர்கள்

வாசிப்புநேரம் -

இந்தியாவில் பெரியவர்கள் அனைவருக்கும் குறைந்தது ஒரு முறையாவது COVID-19 தடுப்பூசி போட்ட முதல் மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் (Himachal Pradesh) திகழ்கிறது.

ஆனால், அந்தச் சாதனையைப் புரிவதில் பல சவால்கள்.

 தொலை தூரத்தில் உள்ள கிராமங்களைச் சென்றடைவதே முதல் சவால்.

அங்குள்ள செங்குத்தான நிலப்பரப்பால், தடுப்பூசி போடும் குழு, பாறைகள் ஏற வேண்டிய கட்டாயம்.

சில ஊரைச் சென்றடையவே பல மணி நேரம் அல்லது நாள்கள் நடக்க வேண்டி இருந்தது.

இவ்வளவு பாடுபட்டு ஊரைச் சென்றடைந்தால், தடுப்பூசி போடத் தயங்கும் மக்கள்.

மலானா (Malana) என்ற ஊருக்கு, முதல் தடுப்பூசி போடச் சென்றபோது அது தான் நடந்ததாக வட்டாரச் சுகாதார அதிகாரி டாக்டர் அதுல் குப்தா (Atul Gupta) குறிப்பிட்டார்.

என்ன செய்வதென்று தெரியாமல், பூசாரிகளைக் கொண்டு உள்ளூர் கடவுளை அழைக்கும் சடங்கைப் பயன்படுத்தியதாக டாக்டர் குப்தா கூறினார்.

3 நாள்களில், சுமார் 700 பேருக்குத் தடுப்பூசி போட அது உதவியதாக அவர் சொன்னார்.

டிசம்பர் மாதத்திற்குள், அனைத்துப் பெரியவர்களுக்கும் தடுப்பூசி போடுவதை இந்தியா இலக்காகக் கொண்டுள்ளது.

5 மில்லியன் பெரியவர்களைக் கொண்ட இமாச்சலப் பிரதேசம் முழுமையாகத் தடுப்பூசி போட்ட முதல் மாநிலமாகத் திகழ வேண்டும் என்றார் அதன் முதலமைச்சர்.

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்