Images
  • India
    படம்: REUTERS 

இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன

இந்தியாவில் தற்போது COVID-19 நோய்த்தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

அதே நேரத்தில் தடுப்பூசிகள் போடும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

தடுப்பூசி போடும் நிலையங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிகள் போட மக்களை சமூக வலைத்தளங்கள்
வழியும் இந்திய அரசாங்கம் அணுகி வருகிறது.

கடந்த வாரம் ஒரே நாளில் 3.2 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு அங்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.

பரந்த நிலப்பரப்பைக் கொண்ட இந்தியாவில் எல்லா மூலைகளுக்கும் தடுப்பூசிகளைக் கொண்டு சேர்ப்பதில் அதிகாரிகள் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

இந்தியாவில் தற்போது 53 மில்லியனுக்கும்
அதிகமானோருக்குத் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் மாதத்திற்குள் அங்கு சுமார் 300 மில்லியனுக்கும் அதிகமானோருக்குத் தடுப்பூசிகள் போடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் 11.8 மில்லியன் பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனர். சுமார் 161,000 பேர் மாண்டனர்.

- Reuters 

Top