Images
  • india covid (2)
    (படம்: REUTERS/Amit Dave)

COVID-19 தடுப்புமருத்துக்கு நெருக்கடிநேர அடிப்படையில் ஒப்புதல் பெற இந்தியா ஆலோசனை

இந்தியாவில், கொரோனா கிருமிப்பரவலுக்கு எதிரான தடுப்பு மருந்தைப் பயன்படுத்துவதற்கு நெருக்கடிநேர அடிப்படையில் அனுமதி வழங்குவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்துவருகின்றனர்.

குறிப்பாக, மூத்தோருக்கும் வேலை இடங்களில் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கும் அந்தத் தடுப்பு மருந்தைத் தரத் திட்டமிடப்படுகிறது.

வர்த்தகங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியதை அடுத்து கிருமிப்பரவல் அங்கு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில்,கிருமித்தொற்றால் ஏற்படும் மரணங்களைக் குறைக்க இந்திய அரசாங்கம் போராடிவருகிறது.

இந்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்று உறுதிசெய்யப்பட்ட பிறகே அது விநியோகிக்கப்படும் என்று கூறினார்.

அடுத்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குள் அதற்கான சோதனைகள் முடிவடைந்துவிடும் என்றார் அவர்.

இந்தியாவில் நேற்று புதிதாக 94,000க்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.

நான்காவது நாளாக அங்கு கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 90,00ஐத் தாண்டியுள்ளது.

அங்கு சுமார் 4.8 மில்லியன் பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகியிருகின்றனர். 

Top