Images
  • india demonstrators
    (படம்: REUTERS/Rupak De Chowdhuri)

இந்தியா: தடுப்பு மருந்துக்குப் பற்றாக்குறை ஏற்படுமா? அச்சத்தில் சில மாநிலங்கள்

இந்தியாவில் நாளுக்கு நாள் COVID-19 நோய் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.

நேற்று மட்டும் அங்கு 115,736 பேருக்குப் புதிதாக நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் ஒரிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்கள் தங்களிடம் போதிய தடுப்புமருந்து இல்லை என்று குறைகூறியுள்ளன.

தற்போது இந்தியாவில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுவருகிறது.

போதிய தடுப்பு மருந்து இல்லாததால் தடுப்பூசி போடும் நிலையங்கள் சீக்கிரமாக மூடப்படுவதாக மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் கூறினார்.

ஒரிசா, மருந்துப் பற்றாக்குறை காரணமாக பாதி நிலையங்களை மூடிவிட்டதாகத் தெரிவித்தது.

ஆனால் தடுப்பு மருந்துக்குப் பற்றாக்குறை இல்லை என்று இந்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்.

இந்தியாவில் இதுவரை 86 மில்லியன் முறை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் 90 விழுக்காடு AstraZeneca தடுப்புமருந்து.

தடுப்பு மருந்துக்குப் பற்றாக்குறை வந்துவிடாமல் இருக்க இந்தியா அதன் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Source: Reuters/ec
 

Top