Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: கிராமங்களில் கைவிடப்பட்டுவரும் COVID-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்; நிபுணர்களிடையே அதிகரிக்கும் அச்சம்

இந்தியாவின் கிராமப்புறங்களில் கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரிக்கும் வேளையில், கிராமங்கள் பலவற்றில் கட்டுப்பாடுகள் கைவிடப்பட்டுவருவதாக Reuters செய்தி நிறுவனம்  தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
இந்தியா: கிராமங்களில் கைவிடப்பட்டுவரும் COVID-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்; நிபுணர்களிடையே அதிகரிக்கும் அச்சம்

(படம்: Reuters)

இந்தியாவின் கிராமப்புறங்களில் கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரிக்கும் வேளையில், கிராமங்கள் பலவற்றில் கட்டுப்பாடுகள் கைவிடப்பட்டுவருவதாக Reuters செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பல கிராமங்களில், மக்கள் முகக்கவசம் அணிவதையும், பாதுகாப்பு இடைவெளியைப் பின்பற்றுவதையும் நிறுத்திக்கொண்டுள்ளனர்.

பல மாதங்களாக விதிமுறைகள் பின்பற்றதன் காரணமாக, கிருமிப்பரவலால் இனி பெரிய ஆபத்து இல்லை என்ற மனப்பான்மை குடியிருப்பாளர்களிடையே நிலவுகிறது.

அவர்களின் போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றம், மருத்துவ நிபுணர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கிராமப்புறங்களில் மிகவும் அடிப்படையான சுகாதார வசதிகள் மட்டுமே இருப்பதால், குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு இடைவெளியை உறுதிசெய்வதும் முகக்கவசங்களை அணிவதும் மிகவும் அவசியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்றால், கிருமித்தொற்று மேலும் மோசமடையும் என்றும் மரணமடைவோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் உலகச் சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்