Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் நோய்த்தொற்று - திணறும் சுகாதாரத்துறை

இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 16,000 பேருக்குப் புதிதாகக்  கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் நோய்த்தொற்று - திணறும் சுகாதாரத்துறை

(படம்: Reuters)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 16,000 பேருக்குப் புதிதாகக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

465 பேர் மாண்டுவிட்டனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 456,000-ஐத் தாண்டிவிட்டது.

உலக அளவில் கிருமித்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா இப்போது நாலாவது இடத்தில் உள்ளது.

அடுத்த மாதத்துக்குள் ரஷ்யாவை முந்திச் சென்று அது மூன்றாவது இடத்தை அடையக் கூடும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையே, மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த மாத இறுதி வரை முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு, இம்மாத இறுதி வரை முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்