Images
  • indo (3)
    படம்: REUTERS 

இந்தியாவில் உருமாறிய கொரோனா கிருமி இந்தோனேசியாவில் அடையாளம் காணப்பட்டது

இந்தியாவில் உருமாறிய கொரோனா கிருமி இந்தோனேசியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மிக வேகமாகப் பரவக்கூடிய ஆற்றலைக் கொண்ட அந்தக் கிருமி வகை, தலைநகர் ஜக்கர்த்தாவில் இரண்டு பேரைப் பாதித்துள்ளது.

அந்தத் தகவலை அந்நாட்டுச் சுகாதார அமைச்சர் பூடி குணாடி (Budi Gunadi) இன்று தெரிவித்தார்.

தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா கிருமி பாலியில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்தியாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் COVID-19 நோய்த்தொற்று காரணமாக அந்நாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்தோனேசியா தடை விதித்துள்ளது.

-Reuters 

Top