Images
  • malaysia covid (1)
    (கோப்புப் படம்: AFP/Mohd Rasfan) 

இந்தியாவில் உருவான புதுவகைக் கொரோனா கிருமி மலேசியாவில் கண்டறியப்பட்டுள்ளது

இந்தியாவில் உருவான புதுவகைக் கொரோனா கிருமி, மலேசியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சர் ஆதம் பாபா (Adham Baba) தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது, இந்தியக் குடிமகன் ஒருவரிடம் அந்தப் புதுவகைக் கிருமி அடையாளம் காணப்பட்டதாக அவர் கூறினார்.

ஆனால், எந்தத் தேதியில் அந்தக் கிருமி அடையாளம் காணப்பட்டது என்பதுபற்றிய விவரங்களைத் திரு. ஆதம் வெளியிடவில்லை.

பொதுமக்களை அமைதி காக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

நோய்ப்பரவலை முறியடிக்கவும் பொதுப் பாதுகாப்பை உறுதிசெய்யவும், பொதுச் சுகாதார முயற்சிகள் அனைத்தும் தொடரும் என அவர் வலியுறுத்தினார்.

கடந்த புதன்கிழமை, இந்தியாவிலிருந்து வந்து செல்லும் விமானங்களுக்கு மலேசியாவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது.

மலேசியாவில் இதுவரை 415,000-க்கும் மேற்பட்டோருக்குக் கிருமி தொற்றியுள்ளது.

1,500க்கும் மேற்பட்டோர் மாண்டனர். 

Top