Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: மின்சாரத்தைத் தவறாக விநியோகிக்கும் மாநிலங்களுக்கு எச்சரிக்கை

இந்தியாவின் மின்சக்தி அமைச்சு மின்சாரத்தைத் தவறாக விநியோகிக்கும் மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாசிப்புநேரம் -
இந்தியா: மின்சாரத்தைத் தவறாக விநியோகிக்கும் மாநிலங்களுக்கு எச்சரிக்கை

(படம்:REUTERS/Adnan Abidi)

இந்தியாவின் மின்சக்தி அமைச்சு மின்சாரத்தைத் தவறாக விநியோகிக்கும் மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் தற்போது நிலக்கரிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மின் உற்பத்திக்கு இந்தியா நிலக்கரியைப் பெருமளவில் சார்ந்துள்ளது.

சில மாநிலங்கள் நிலைமையைப் பயன்படுத்தி அவற்றுக்கு ஒதுக்கப்படும் மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு அதிக விலைக்கு விற்பதாக அமைச்சு தெரிவித்தது.

மின்சாரத்தைத் தவறாக விநியோகிக்கும் மாநிலங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவற்றுக்கு ஒதுக்கப்படும் மின்சாரம் குறைக்கப்படும் என்றும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

சில மாநிலங்கள் தங்கள் மக்களுக்கென மின்சாரத்தைப் பயன்படுத்தாமல் அவ்வப்போது மின்விநியோகத்தை நிறுத்தி வைத்து, அதை மற்ற மாநிலங்களுக்குக் கொடுப்பதாக அமைச்சு சுட்டியது.

- Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்