Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தடுப்பூசித் திட்டத்தை விரிவுபடுத்துங்கள்- பிரதமர் மோடியிடம் இந்திய மாநிலங்கள்

இந்தியாவில் தடுப்பூசித் திட்டத்தை விரிவுபடுத்தவேண்டும் என்று பல மாநிலத் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
தடுப்பூசித் திட்டத்தை விரிவுபடுத்துங்கள்- பிரதமர் மோடியிடம் இந்திய மாநிலங்கள்

(படம்: AFP / Prakash SINGH)

இந்தியாவில் தடுப்பூசித் திட்டத்தை விரிவுபடுத்தவேண்டும் என்று பல மாநிலத் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாட்டில் இரண்டாவது முறையாகத் தலைதூக்கியுள்ள கிருமிப்பரவல், முதன்முறை இருந்ததைவிட மோசமானதாக உள்ளது எனக் கூறப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய தடுப்பூசித் தயாரிப்பாளராக இந்தியா திகழ்கிறது.

இருப்பினும், பெரும்பாலான பெரியவர்களுக்கு இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை.

இதுவரை இந்தியாவில் மொத்தம் 80.9 மில்லியன் முறை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போட இம்மாதம் தடுப்பூசித் திட்டம் விரிவாக்கப்பட்டது.

ஆனால் இதுவரை மக்கள் தொகையில் 4 விழுக்காட்டினருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இன்று அங்கு சுமார் 97 ஆயிரம் பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் 446 பேர் கிருமித்தொற்றால் மாண்டனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்