Images
  • tiktok
    படம்: AFP/JOEL SAGET

சீனச் செயலிகளுக்கு இந்தியா தடை - உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்கு எதிரானது: சீனா

Tik Tok உட்பட 59 சீனச் செயலிகள் மீது இந்தியா தடை விதித்திருப்பது, உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்கு எதிரானது என்று சீனா தெரிவித்துள்ளது.

வெளிப்படையற்ற, தெளிவற்ற காரணங்களின் அடிப்படையில், இந்தியா குறிப்பிட்ட சீனச் செயலிகளுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதாகவும், விதிவிலக்குகளைத் தவறான வகையில் பயன்படுத்துவதாகவும் சீனா குற்றஞ்சாட்டியது.

அவ்வாறு தடை செய்வது, இந்தியாவில் பலரின் வேலைகளையும் பாதிக்கலாம் என்றும் அது சொன்னது. அனைத்து முதலீடுகளையும் சேவை வழங்கும் நிறுவனங்களையும் இந்தியா சமமாக நடத்தவேண்டும் என்றும் அது கோரியது.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக எல்லைப் பகுதியில் பதற்றம் நீடிக்கிறது. 

Top