Images
  • Indian Farmers Arrested
    (படம்: AFP Photo/NARINDER NANU)

இந்தியா: காற்றுத் தூய்மைக்கேடு தொடர்பில் 80 விவசாயிகள் கைது


இந்தியத் தலைநகர் புதுடில்லியல் நிலவும் காற்றுத் தூய்மைக் கேட்டின் தொடர்பில் விவசாயிகள் 80 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

விவசாயிகள் 170 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு புதுடில்லியில் கடந்த ஒரு வாரமாக காற்றின் தரம் மோசமடைந்திருக்கிறது.

அதனால், அங்குள்ள மக்கள் பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளால் அவதிப்படுகின்றனர்.

புதுடில்லியைச் சுற்றியுள்ள மாநில விவசாயிகள் பயிர்களை எரிப்பதும் காற்றுத் தூய்மைக் கேட்டுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

விவசாயிகள் சட்ட விரோதமாகப் பயிர்களை எரிப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியிருந்தது.

என்றாலும், விவசாயிகள் பயிர்களை எரிப்பதை நிறுத்தவில்லை.

தங்களுடைய அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காகப் பலர் இரவில் பயிர்களை எரித்தனர்.

அதைத் தொடர்ந்து பயிர்களை எரித்த விவசாயிகளைக் கைது செய்து அதிகாரிகள் வழக்குப் பதிந்துள்ளனர்.

ஆனால், புது டில்லியில் நிலவும் காற்றுத் தூய்மைக்கேட்டுக்குத் தங்களைப் பழி சொல்வது நியாயமல்ல என்று விவசாயிகள் சிலர் குமுறுகின்றனர்.  

Top