Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்திய நோட்டுகளைச் சீன நிறுவனம் அச்சிடும் தகவல் ஆதாரமற்றது: புதுடில்லி

இந்திய நோட்டுகளை சீன நிறுவனம் அச்சிடுவதாக வெளிவந்த தகவல் ஆதாரமற்றது என்று கூறி இந்திய அரசாங்கம் அதனை நிராகரித்துள்ளது.

வாசிப்புநேரம் -

இந்திய நோட்டுகளை சீன நிறுவனம் அச்சிடுவதாக வெளிவந்த தகவல் ஆதாரமற்றது என்று கூறி இந்திய அரசாங்கம் அதனை நிராகரித்துள்ளது.

சீன நிறுவனம் ஒன்று, இந்திய நோட்டுகள் உட்பட வெளிநாட்டு நோட்டுகள் சிலவற்றை அச்சிட குத்தகைகளைப் பெற்றுள்ளதாக சவுத் சீனா மோர்னிங் போஸ்ட் நாளேடு (South China Morning Post) குறிப்பிட்டது.

சமூக ஊடகங்களில் அது குறித்து பலரும் பொங்கியெழுந்தனர்.

தேசிய பாதுகாப்பு குறித்த அக்கறைகளை அவர்கள் வெளிபடுத்தினர்.

இந்தியா அதன் அனைத்து நோட்டுகளையும் பாதுகாப்பு வலுவாக இருக்கும் 4 அச்சகங்களில் மட்டுமே அச்சிடுவதாக அந்நாட்டின் பொருளாதார விவகாரத் துறை அதிகாரி கூறினார்.

அந்தச் சர்ச்சையில் சிக்கிகொண்டுள்ள நிறுவனமான China Banknote Printing and Minting Corporation, நோட்டுகளை அச்சிடும் உலகின் ஆக பெரிய நிறுவனமாக தன்னை வருணித்துக்கொள்கிறது.

மலேசியா, தாய்லந்து, இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பிரேசில், போலந்து போன்ற நாடுகளில் நோட்டுகளை அச்சிடும் குத்தகைளைப் பெற்றுள்ளதாக அந்த நிறுவனம் கூறியதாக, சவுத் சீனா மோர்னிங் போஸ்ட் நாளேடு (South China Morning Post) தகவல் அளித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்