Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

விமானச் சாகசப் பயிற்சியின்போது இரு இந்திய ஆகாயப் படை விமானங்கள் மோதியதில் விமானி ஒருவர் மரணம்

விமானச் சாகசத்திற்கு இன்று பயிற்சி செய்துகொண்டிருந்த இந்திய ஆகாயப் படையின் இரண்டு போர் விமானங்கள் நடுவானில் மோதியதில் விமானி ஒருவர் மாண்டார்.

வாசிப்புநேரம் -
விமானச் சாகசப் பயிற்சியின்போது இரு இந்திய ஆகாயப் படை விமானங்கள் மோதியதில் விமானி ஒருவர் மரணம்

(படம்: AP/Aijaz Rahi)

வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்

விமானச் சாகசத்திற்கு இன்று பயிற்சி செய்துகொண்டிருந்த இந்திய ஆகாயப் படையின் இரண்டு போர் விமானங்கள் நடுவானில் மோதியதில் விமானி ஒருவர் மாண்டார்.

விமானக் கண்காட்சிக்குத் தயாராகிக்கொண்டிருந்தபோது அந்த விமானங்கள் மோதின.

மோதிய பிறகு விமானங்களில் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வானில் சுழன்றதாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

இந்தியாவின் பெங்களூர் நகரத்தில் உள்ள யெலஹங்கா விமானத் தளத்திற்கு வெளியே இருக்கும் குடியிருப்புப் பேட்டையில் விமானம் நொறுங்கி விழுந்தது.

விமானப் பாகங்களால் பொதுமக்களில் ஒருவர் காயமுற்றார்.

விமானிகள் வான்குடையைப் பயன்படுத்திப் பாதுகாப்பாக விமானத்திலிருந்து வெளியேறினர்.

ஒரு விமானி மட்டும் கடுமையான காயங்களால் மரணமடைந்ததாக இந்திய ஆகாயப் படை தெரிவித்தது.

சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்