Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: கோயம்புத்தூரில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ஆதரவாளர் கைது

இந்திய பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு அதிகாரிகள், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ஆதரவாளர்களுக்கு எதிராக 7 இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர்

வாசிப்புநேரம் -
இந்தியா: கோயம்புத்தூரில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ஆதரவாளர் கைது

(படம்: AFP)

இந்திய பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு அதிகாரிகள், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ஆதரவாளர்களுக்கு எதிராக 7 இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர். தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் நகரில் நடத்தப்பட்ட சோதனையில் 32 வயது முகமது அஸாருதீன் கைது செய்யப்பட்டார்.

இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டுத் தாக்குதல்களுக்குக் காரணமான ஸாஹரான் ஹஷிமை அஸாருதீன் பின்தொடர்ந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. கைதுசெய்யப்பட்ட முக்கியச் சந்தேக நபர் ஹஷிமுடன் Facebook நண்பராய் இருந்துள்ளதாக தேசியப் புலனாய்வு ஆணையம் தெரிவித்தது.

தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த சதித் தீட்டிய சந்தேகத்தின்பேரில் அஸாருதீன் தவிர மேலும் ஐந்து பேரின் பெயரையும் ஆணையம் வெளியிட்டது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்