Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியாவின் சர்ச்சைக்குரிய சமய போதகரை விசாரித்த மலேசியக் காவல்துறை

கோலாலம்பூர்: இந்தியாவின் சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகீர் நாயக் மலேசியக் காவல்துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

வாசிப்புநேரம் -
இந்தியாவின் சர்ச்சைக்குரிய சமய போதகரை விசாரித்த மலேசியக் காவல்துறை

படம்: REUTERS

கோலாலம்பூர்: இந்தியாவின் சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகீர் நாயக் மலேசியக் காவல்துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பல்லின சமுதாயத்தில், சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த அவரை நாடுகடத்தும்படி நெருக்கடி அதிகரித்து வருகிறது.

செப்டம்பர் 11 தாக்குதலை ஒரு சதித்திட்டம் என்று கூறிய ஸாகீர், 2016இல் இந்தியாவிலிருந்து வெளியேறி மலேசியாவுக்குக் குடிபுகுந்தார். அங்கு அவர் நிரந்தரவாசியாக வசித்துவருகிறார்.

பிரிவினைவாதத்தைத் தூண்டுதல், கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குதல் போன்றவற்றின் தொடர்பில் ஸாகீரை விசாரிக்க இந்தியா விரும்புகிறது. அவரை இந்தியாவுக்கு அனுப்பிவைக்குமாறு புதுடில்லி கடந்த ஆண்டு விடுத்த கோரிக்கையை மலேசியா நிராகரித்தது.

ஆனால் மலேசியாவில் வாழும் இந்துக்களைப் பற்றியும் சீனர்களைப் பற்றியும் அவர் கூறிய கருத்துகளால், மலேசிய அமைச்சரவையின் பல உறுப்பினர்கள் ஸாகீரை வெளியேற்றும்படி வெளிப்படையாகக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஸாகீரின் செயல் எல்லை மீறிவிட்டது என்று பிரதமர் மகாதீர் முகமதும் கூறியுள்ளார்.

ஸாகீரை மலேசியாவிலிருந்து வெளியேற்றினால் அங்குள்ள முஸ்லிம்கள் கோபப்படுவர் என்றும் அரசாங்கத்தை எதிர்க்கட்சிகள் சாடும் என்றும் கருதப்பட்டதால் இதற்குமுன் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்