Images
  • india protest
    (படம்: NOAH SEELAM / AFP)

இந்தியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள்

இந்தியாவில் இன்று (26 நவம்பர்) பின்னேரத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் இறங்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம் இந்திய அரசாங்கம், சர்ச்சைக்குரிய வேளாண்மைச் சட்டங்களை மீட்டுக்கொள்வதாகக் கூறியும் ஆர்ப்பாட்டங்கள் தொடரவுள்ளன.

கடந்த ஆண்டு இதே நாளில் விவசாயிகள் முதல் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர்.

வேளாண்மைத் தயாரிப்புகளுக்கு இன்னும் அதிக விலையைப் பெற இந்திய அரசாங்கம் கடந்த ஆண்டு புதிய சட்டங்களை அறிமுகம் செய்தது.

ஆனால் பெரிய தனியார் வர்த்தகர்களுடன் பேரம் பேசும் அதிகாரம் தங்களுக்குக் குறைவு என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

அரசாங்கம் அதன் சார்பிலான காரணங்களை விவசாயிகளுக்குத் தெரிவிக்கத் தவறிவிட்டதாக இந்தியப் பிரதமர் மோடி கூறினார்.

அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் இடம்பெறவுள்ளது.

புதிய தொடக்கத்திற்கு வேண்டுகோள் விடுத்த திரு. மோடி, புதிய வேளாண்மைத் திட்டங்களை அறிமுகம் செய்யவிருப்பதாகக் கூறினார்.

விவசாயிகள் ஆர்ப்பாட்டங்களை நிறுத்திவிட்டு இல்லம் திரும்புமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

Top