Images
  • soldiers (1)
    (படம்: AFP)

சீன ராணுவத்துடன் ஏற்பட்ட படகு மோதலில் இந்திய வீரர்கள் காயம்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

இந்தியா-சீனா இரு நாடுகளும் உரிமை கோரும் காஷ்மீர்ப் பகுதியில் உள்ள ஓர் ஏரியில், இரு நாட்டு ராணுவப் படகுகளும் மோதிக்கொண்டதாய் இந்திய அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

அதன் தொடர்பில் AP நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

சம்பவத்தில் இந்தியத் துருப்பினர் சிலருக்குக் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால் நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

லடாக் பகுதியில் சர்ச்சைக்குரிய இந்திய சீன எல்லையில் இருதரப்பும் மோதிக்கொண்டன.

பெயர் குறிப்பிட விரும்பாத இந்திய அதிகாரி ஒருவர் அது குறித்து ஊடகங்களிடம் தெரிவித்தார்.

சம்பவத்தைத் தொடர்ந்து இருதரப்பையும் சேர்ந்த பேராளர்கள் சந்தித்துப் பேசி, பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கண்டதாய் அவர் சொன்னார்.

நிலைமை சீரானதை இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளரும் பின்னர் உறுதிசெய்தார்.

சர்ச்சைக்குரிய லடாக் பகுதியின் எல்லை தொடர்பில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் 1962-ஆம் ஆண்டு போர் மூண்டது.

எல்லை சரியாக வரையறுக்கப்படாததால், அவ்வப்போது இருதரப்புக்கும் இடையில் பிரச்சினைகள் எழுவதுண்டு.  

Top