Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியாவின் புதிய அதிவேக ரயில் சேவையில் தடை

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புதிய அதிவேக ரயில் சேவையில் தடை ஏற்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
இந்தியாவின் புதிய அதிவேக ரயில் சேவையில் தடை

(படம்: Reuters/Adnan Abidi)

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புதிய அதிவேக ரயில் சேவையில் தடை ஏற்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (பிப்ரவரி 15) அந்த ரயில் சேவையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

இருப்பினும், அந்தப் புதிய ரயில் சேவையில், இன்று (பிப்ரவரி 16) காலை தடை ஏற்பட்டது.

வாரணாசியிலிருந்து புது டில்லி திரும்பி கொண்டிருந்தபோது ரயில் சேவை தடைப்பட்டது. அதற்கான காரணம் குறித்து ஆராயப்படுகிறது.

Vande Bharat Express என்றழைக்கப்படும் அந்த ரயில், மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.

அந்த ரயில் மீண்டும் நாளை (பிப்ரவரி 17) செயல்படத் தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்